இளையராஜாவுக்கு பதிலடி கொடுத்த “குட் பேட் அக்லி”

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு குட் பேட் அக்லி படம் திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் வெளியான சில நாட்களிலேயே 100 கோடியை தாண்டி வசூல் செய்திருக்கிறது.
சமீபகாலமாக வெளியாகும் படங்களில் பழைய பாடல்களை வைத்து வருகிறார்கள். அவ்வாறு தான் குட் பேட் அக்லி படத்தில் என் ஜோடி மஞ்ச குருவி, ஒத்த ரூபாயும் தாரேன், இளமை இதோ போன்ற பாடல்கள் இடம் பெற்றிருந்தது.
இந்த பாடல்கள் எல்லாமே இளையராஜா இசையமைத்த பாடல்கள். தன்னுடைய அனுமதி இல்லாமல் இந்த பாடல்களை பயன்படுத்தி உள்ளதாக 5 கோடி நஷ்ட ஈடு கேட்டு இளையராஜா வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.
ஆனால் இளையராஜா தன்னுடைய பாடல்களை எல்லாம் தனியார் கம்பெனிகளுக்கு விட்டிருக்கிறார். அவ்வாறு தான் குட் பேட் அக்லி படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்த பாடலுக்கு சம்பந்தப்பட்ட கம்பெனி இடம் காப்புரிமை வாங்கி இருக்கிறதாம்.
இதெல்லாம் முறைப்படி செய்து தான் அந்த பாடல்களை பயன்படுத்தி உள்ளதாக பதிலடி கொடுத்திருக்கின்றனர்.
இதற்கு இளையராஜா தரப்பில் இருந்து என்ன பதில் வருகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.