மிக மோசமான நிலையில் காஸா – மாபெரும் சவாலாக மாறும் சீரமைப்பு பணி
இஸ்ரேல் – ஹமாஸ் இடையில் கடந்த இரண்டு ஆண்டுகாலமாக நீடித்த போரினால் காஸா நகரங்கள் மிக மோசமான நிலைக்குள்ளாகியுள்ளது.
கடுமையாகச் சேதமடைந்துள்ள காஸா பிரதேசத்தை மீண்டும் கட்டியெழுப்புவது ஒரு மாபெரும் பணியாக இருக்கும் என ஐக்கிய நாடுகளின் மனிதாபிமானப் பிரிவின் தலைவர் டொ பிளட்சர் (Tom Fletcher) கவலை வெளியிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் அதிகாரிகளுடன் காஸா சிட்டியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிளட்சர், அங்குள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலையை நேரில் பார்வையிட்டார்.
காஸாவின் வடக்கே உள்ள அந்த ஆலையிலிருந்து கசியும் கழிவுநீர், எங்கும் நிறைந்திருக்கும் இடிபாடுகளுக்கு இடையே ஓடுவதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.
சுமார் 8 மாதங்களுக்கு முன்பு தான் இந்தப் பகுதிக்கு வந்தபோது இங்கு பல உயரமான கட்டடங்கள் இருந்தன. ஆனால், இன்று அப்பகுதி முழுமையாகப் பாழடைந்துவிட்டது. பல இடங்கள் வெறிச்சோடிப் போயிருக்கும் நிலை மிகுந்த வருத்தமளிக்கின்றது.
இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் இந்தப் பகுதிக்குத் தேவையான அத்தியாவசிய உட்கட்டமைப்புகளைச் சீரமைப்பது ஐ.நா. நிறுவனத்துக்கு ஒரு பாரிய சவாலாக இருக்கும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





