கொலைக்களமாக மாறும் காசா – ஐ.நா கவலை

காசா ஒரு கொலைக்களமாக மாறியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.
மரண வலயத்திற்குள் பெருந்தொகை மக்கள் சிக்கியுள்ளதாக பொதுச் செயலாளர் கவலை வெளியிட்டுள்ளார்.
உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் காசாவை சென்றடைவதை உறுதி செய்யுமாறும் அவர் உலக நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, காசாவில் போதுமான உணவு இருப்பதாக இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சு வலியுறுத்தியதோடு, குட்டரெஸ் இஸ்ரேலுக்கு எதிராக அவதூறு பரப்புவதாகக் குற்றம் சாட்டியுள்ளது.
(Visited 22 times, 1 visits today)