காசா-எகிப்து எல்லைப் பகுதி இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்- நெதன்யாகு
காசா பகுதிக்கும் எகிப்துக்கும் இடையிலான எல்லைப் பகுதி இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
மேலும், பாலஸ்தீனத்திலும், அந்த பிராந்தியத்திலும் தற்போது நடைபெறும் போர் பல மாதங்களுக்கு நீடிக்கலாம் என அவர் கணித்துள்ளார்.
அக்டோபர் 7ம் திகதி தொடங்கிய போர், நேற்றுடன் 13வது வாரத்தை எட்டியுள்ள நிலையில், ஹமாஸை ஒழித்து, காசாவில் பிடித்து வைக்கப்பட்டுள்ள பணய கைதிகளை மீட்பதற்கான வாக்குறுதியை, பத்திரிக்கையாளர் சந்திப்பில் நெதன்யாகு மீண்டும் உறுதிப்படுத்தினார்.
“பிலடெல்பி காரிடார் – அல்லது இன்னும் சரியாகச் சொல்லவேண்டுமானால், காசாவின் தெற்குப் புள்ளி- நம் கைகளில் இருக்க வேண்டும். அது மூடப்பட வேண்டும். வேற எதுவும் அப்பகுதியை நாம் விரும்புவதுபோல் இராணுவமயமற்றதாக மாற்றாது என்பது தெளிவாகிறது” என்றார்.