பிரித்தானியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் எரிவாயு விலை உச்சம்
கட்டாரின் ராஸ் லஃபான் (Ras Laffan) எரிசக்தி வளாகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பின்னர் பிரித்தானியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் எரிவாயு விலை திடீரென உயர்ந்துள்ளது.
இந்த தாக்குதலில் கட்டார் (Qatar) நாட்டில் உள்ள வசதிகளுக்கு குறிப்பிடத்தக்க சேதம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரான் (Iran) மீது மேலும் தாக்குதல்கள் நடத்த வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதனிடையே, ஈரானின் சவுத் பார்ஸ் (South Pars) எரிவாயு வயலில் இஸ்ரேல் (Israel) நடத்தியதாக கூறப்படும் தாக்குதல் குறித்து அமெரிக்காக்கு எந்தத் தகவலும் வழங்கப்படவில்லையென ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு வளங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த பகுதியை கத்தார் (Qatar) மற்றும் ஈரான் (Iran) இணைந்து பயன்படுத்தி வருகின்றன.
இச்சம்பவம் குறித்து இஸ்ரேல் (Israel) இதுவரை எந்த அதிகாரப்பூர்வ பதிலும் அளிக்கவில்லை.
மேலும், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை (West Bank) பகுதியில் இடைமறிக்கப்பட்ட ஏவுகணையின் சிதறல்கள் ஒரு அழகு நிலையத்தின் மீது விழுந்ததில் மூன்று பெண்கள் உயிரிழந்ததாக பலஸ்தீனிய செஞ்சிலுவைச் சங்கம் (Palestinian Red Crescent Society) தெரிவித்துள்ளது.




