கனேமுல்ல சஞ்சீவ விவகாரம் – சந்தேக நபருக்கு அவசர மருத்துவ சிகிச்சை அளிக்குமாறு கோரிக்கை

கனேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் சந்தேக நபருக்கு அவசர மருத்துவ சிகிச்சை அளிக்குமாறு நீதிமன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணி, சந்தேக நபரின் காதுகளைப் பாதிக்கும் உடல்நலப் பிரச்சினையைக் காரணம் காட்டியுள்ளார்.
நீதிமன்ற அமர்வின் போது, தனது கட்சிக்காரருக்கு குறித்த காது சம்பந்தமான நோய் ஏற்பட்டுள்ளதாக சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
குறித்த நோய் நிலைமை பொலிஸ் காவலில் இருந்தபோது ஏற்படவில்லை என்றும் சந்தேக நபரின் பேரில் ஆஜரான சட்டத்தரணி தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக சட்ட நடைமுறைப்படுத்தலிற்கு எதிராக எந்த குற்றச்சாட்டுகளும் சுமத்தப்படவில்லை என்று அவர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.
எனவே முறையான பொலிஸ் வழிகள் மூலம் தேவையான மருத்துவ சிகிச்சையை வழங்குமாறு சட்டத்தரணி, அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளார்.