உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் பேரிடரை ஒப்பிடும் கம்மன்பில!
பேரிடர் தொடர்பில் அலட்சிய போக்குடன் செயல்பட்ட தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எதிராக வழக்கு தொடுக்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
தற்போது தகவல்கள் திரட்டப்பட்டுவருவதாகவும், தந்திரோபாயமான முறையிலேயே வழக்கு தொடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் கம்மன்பில மேலும் கூறியவை வருமாறு,
“ உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்கூட்டியே தகவல் கிடைத்தும், உரிய நடவடிக்கை எடுக்கப்படாததாலேயே பாரிய அழிவு ஏற்பட்டது. நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடரின்போதும் அலட்சிய போக்குடன் செயல்பட்டுள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை ஏற்பட்ட இழப்பைவிடவும் ஆயிரம் மடங்கு இழப்பு தற்போது ஏற்பட்டுள்ளது.
பெலவத்தையில் (ஜே.வி.பி. தலைமையகம்) நிதி உள்ளது. இது இழப்பீடுக்கு வழங்கப்பட வேண்டும். அமைச்சரவையும் பொறுப்பு கூற வேண்டும். அமைச்சர்களின் நிதியும் வழங்கப்பட வேண்டும். தமது தவறை அரசாங்கம் ஏற்கவேண்டும்.
அவ்வாறு இல்லையேல்தான் நாம் சட்ட நடவடிக்கையில் இறங்குவோம். எமது சட்டத்தரணிகள் இது பற்றி ஆராய்ந்துவருகின்றனர்.” – என்றார் உதய கம்மன்பில.





