கஜேந்திர குமார் பொன்னம்பலம் வெளிநாடு செல்ல தடை!
பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு வெளிநாட்டு பயணத்தடை விதித்து கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் இன்று (06) உத்தரவு பிறப்பித்துள்ளது.
அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவிப்பதற்கும், அவர்களை வாய்மொழியாக துஷ்பிரயோகம் செய்ததற்கும் உடந்தையாக இருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் நாளை (06) ஆஜராகுமாறு தனக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
(Visited 20 times, 1 visits today)





