விரிவான அணு சோதனை தடை ஒப்பந்தத்தை அங்கீகரிக்க அமைச்சரவை ஒப்புதல்!
விரிவான அணு சோதனை தடை ஒப்பந்தத்தை அங்கீகரிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்படி விரிவான அணு-சோதனை தடை ஒப்பந்தத்தை (CTBT) அங்கீகரிப்பதற்கும், “எந்தவொரு அணு ஆயுத சோதனை அல்லது தடைசெய்யும் ஒப்பந்தத்தின் உறுப்பு நாடுகளின் ஒப்பந்த விதிகளை அமல்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் வழியமைக்கப்பட்டுள்ளது.
இலங்கை வெளிவிவகார அமைச்சர் முன்வைத்த யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் 10.09.1996 அன்று விரிவான அணுசக்தி சோதனை தடை ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 186 நாடுகள் கையெழுத்திட்டுள்ள இந்த ஒப்பந்தத்தில், 24.10.1996 அன்று இலங்கையும் இணைந்துக் கொண்டது.
எவ்வாறாயினும், பயிற்சி, திறன் மேம்பாடு, தரவு மற்றும் தகவல் பகிர்வு ஆகிய துறைகளில் இலங்கை தற்போது விரிவான அணு-சோதனை தடை ஒப்பந்த அமைப்புடன் ஒத்துழைத்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.