உலகம் செய்தி

G7 மாநாட்டில் ‘மத்திய கிழக்கு போர்’ குறித்து ஆராய்வு: இந்தியாவும் பங்கேற்பு!

G7 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரான்ஸ் சென்றுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அங்கு முக்கியத்துவமிக்க சந்திப்புகளில் ஈடுபடவுள்ளார்.

G7 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் பங்கேற்கும் முக்கிய கூட்டம் நேற்று ஆரம்பமானது. இன்றும் கூட்டம் நடைபெறுகின்றது.

மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றத்தைத் தணிப்பது மற்றும் சர்வதேச வர்த்தகத்துக்கான கடல்சார் பாதையான ஹார்முஸ் நீரிணையை எவ்விதத் தடையுமின்றி இயக்குவது குறித்து மாநாட்டில் விரிவாக ஆராயப்பட்டுவருகின்றது.

G7 கூட்டமைப்பில் இந்தியா உறுப்பினராக இல்லாதபோதிலும், பிரான்ஸ் விடுத்த அழைப்பின் பிரகாரம் ‘கூட்டணி நாடு’ என்ற அந்தஸ்தில் இந்தியா பங்கேற்றுள்ளது.

அமெரிக்கா, கனடா, ஜேர்மனி, இத்தாலி, பிரான்ஸ், ஜப்பான் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளின் உயர்மட்ட அதிகாரிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

மாநாட்டில் பங்கேற்றுள்ள வெளி நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடன், ஜெய்சங்கர் இரு தரப்பு பேச்சுகளில் ஈடுபடவுள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!