க. பொ.த உயர்தர பரீட்சை திகதி அறிவிப்பு – மேலதிக வகுப்புகளுக்கு தடை!
2025 ஆம் ஆண்டுக்கான க. பொ.த உயர்தர பரீட்சைகள் வரும் 10 ஆம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் மாதம் 05 திகதிவரை நடைபெறவுள்ளன.
இந்நிலையில் மேலதிக கல்வி வகுப்புகள், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகள் வரும் 04 ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை செய்யப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
தேர்வு காலம் முடியும் வரை இந்தத் தடை அமலில் இருக்கும் என்றும் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.





