இலங்கை செய்தி

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை – மேலதிக வகுப்புக்களுக்குத் தடை

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை காரணமாக, எதிர்வரும் 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை நிறைவடையும் வரை மேலதிக வகுப்புக்கள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில், சாதாரண தரப் பரீட்சையை எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை நாடு முழுவதும் உள்ள 3,545 பரீட்சை மத்திய நிலையங்களில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை நிறைவடையும் வரை மேலதிக வகுப்புக்கள், கருத்தரங்குகள், செயலமர்வுகள் நடத்துதல் போன்றவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!