இலங்கை செய்தி

இன்று நள்ளிரவு முதல் புதிய நடைமுறை வரும் வகையில் எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு

QR குறியீட்டு முறையின் கீழ் வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீட்டை (Quota) இன்று (21) நள்ளிரவு முதல் அதிகரிப்பதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, வாகனங்களுக்கான புதிய எரிபொருள் ஒதுக்கீட்டு விபரங்கள் வருமாறு,

மோட்டார் வாகனங்கள் -15 லீற்றரிலிருந்து 25 லீற்றர் வரை அதிகரிப்பு.

முச்சக்கரவண்டிகள் – எரிபொருள் ஒதுக்கீடு 20 லீற்றர் வரை அதிகரிப்பு.

வேன்கள் – 50 லீற்றர் வரை அதிகரிப்பு.

மோட்டார் சைக்கிள்கள் – 8 லீற்றர் வரை அதிகரிப்பு.

பேருந்துகள் – 100 லீற்றர் வரை அதிகரிப்பு.

நில வாகனங்கள் –  25 லீற்றரிலிருந்து 40 லீற்றர் வரை அதிகரிப்பு.

குவாட்ரி சைக்கிள்கள் – 5  லீற்றரிலிருந்து 8 லீற்றர் வரை அதிகரிப்பு.

எவ்வாறாயினும், லொறிகளுக்கான 200 லீற்றர் ஒதுக்கீடு மற்றும் விசேட தேவைக்கான வாகனங்களுக்கு வழங்கப்படும் 40 லீற்றர் ஒதுக்கீடு ஆகியவற்றில் எவ்வித மாற்றங்களும்  மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது.

எரிபொருள் விநியோகத்தை சீர்செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!