அறிவியல் & தொழில்நுட்பம்

ஐபோன் முதல் சாம்சங் வரை… செப்டம்பரில் அறிமுகம் ஆகும் கையடக்க தொலைபேசிகள்

ஸ்மார்போன்கள் என்பது அத்தியாவசிய தேவையாக மாறிப்போன நிலையில், வாடிக்கையாளர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு, செல்போன் தயாரிப்பு நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் புதிய வகை ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. கடன் வசதி, இஎம்ஐ வசதி போன்றவை காரணமாக, பிரீமியம் போன்கள் வாங்குபவர்களீன் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இரண்டு மூன்று வருடங்களில் ஸ்மார்ட்போன்களை மாற்றுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

செப்டெம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்படும் ஸ்மார்ட்போன்கள்

அந்த வகையில், புதிய மொபைலை வாங்க திட்டமிட்டிருந்தால், சற்று பொறுத்திருப்பது நல்லது. ஏனெனில் அடுத்த மாதம் ஒன்றல்ல இரண்டல்ல பல புதிய ஸ்மார்ட்போன்கள் உங்களுக்காக சந்தையில் அறிமுகம் ஆக உள்ளன. செயற்கை நுண்ணறிவு அதிகம் பிரபலமாகி வரும் நிலையில், அடுத்த மாதம் அறிமுகப்படுத்தப்படும் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் மேம்பட்ட அம்சங்கள் மற்றும் AI அம்சங்களின் ஆதரவு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Motorola Razr 50

மோட்டோரோலா நிறுவனத்தின் இந்த புதிய மடிக்கக்கூடிய போன் செப்டம்பர் 9 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. 3.6 இன்ச் எக்ஸ்டர்னல் டிஸ்ப்ளே, மோட்டோ ஏஐ வசதிகள், ஐபிஎக்ஸ்8 வாட்டர் ரெசிஸ்டண்ட், கொரில்லா கிளாஸ், வேகன் லெதர் பினிஷ் ஆகியவை இதன் சில சிறப்பு அம்சங்கள். 50 மெகாபிக்சல் பிரைமரி கேமரா சென்சார் மற்றும் 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா இதில் உள்ளது.
மோட்டோரோலா நிறுவனத்தின் இந்த போனின் அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்குப் பிறகு, இதன் விற்பனை இ-காமர்ஸ் தளமான அமேசானில் தொடங்கும். அமேசானில் இந்த போனுக்கு தனி மைக்ரோசைட் தயார் செய்யப்பட்டுள்ளது.

iPhone 16 சீரிஸ் போன்கள்

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 16 சீரிஸ் அடுத்த மாதம் செப்டம்பர் 9 ஆம் தேதி அறிமுகம் ஆக உள்ளது, இந்த தொடரில் ஒன்றல்ல இரண்டல்ல நான்கு புதிய மாடல்களை அறிமுகப்படுத்தலாம் என தகவல்கள் வெளியாகின்றன. ஐபோன் 16 தவிர, ஐபோன் 16 பிளஸ், ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஆகிய 4 போன்கள் அறிமுகப்படுத்தப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது, ​​ஆப்பிள் அதன் புதிய மாடல்களில் உள்ள சிறப்பு அம்சங்கள் தொடர்பான எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் பகிர்ந்து கொள்ளவில்லை. ஆனால் ஐபோன் 16 தொடரில் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்டாண்டர்ட் மாடல்களில் புதிய கேமரா அமைப்பு இருக்கலாம் என கூறப்படுகிறது. இது தவிர, ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் மாடல்கள் ஐபோன் 15 சீரிஸை விட அதிக திறன் கொண்ட பேட்டரியைக் கொண்டிருக்கலாம் என தகவல்கள் கசிந்துள்ளன.

ஐபோன் 16 தொடரின் அறிமுகத்திற்குப் பிறகு, அதன் விற்பனை அடுத்த மாதத்திலிருந்து தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஐபோன் மாடல்களைத் தவிர, புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் மற்றும் அடுத்த தலைமுறை ஆப்பிள் ஏர்போட்களும் அறிமுகப்படுத்தலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Mi Mix Flip

Xiaomi MIX Flip ஸ்மார்ட்போனை அடுத்த மாதம் இந்தியா உட்பட உலகளாவிய சந்தைகளில் அறிமுகப்படுத்தலாம் என கூறப்படுகிறது. இருப்பினும், அறிமுக தேதி இன்னும் அதிகாரபுர்வமாக அறிவிக்கப்படவில்லை. Mi Mix Flip மாடல் போன் ஏற்கனவே சீனாவில் Snapdragon 8 Gen 3, 67W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Samsung Galaxy S24 FE

அடுத்த மாதம் உலக சந்தையில் கேலக்ஸி எஸ் 24 எஃப்இ Samsung Galaxy S24 FE அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங் அதை இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்றாலும், இந்த தொலைபேசி சமீபத்தில் அமெரிக்க ஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷன் (FCC) இணையதளத்தில் காணப்பட்டதால், விரைவில் அறிமுகம் என எதிர்பார்க்க்லாம்.

Tecno Phantom V Flip

டெக்னோ பாண்டம் வி ஃபிளிப் சிங்கப்பூரில் செப்டம்பர் 22 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. போன் 6.75 இன்ச் டிஸ்ப்ளே, 64MP பிரதான கேமரா மற்றும் 45W சார்ஜிங் ஆதரவுடன் வரும் இந்த போன் வடிவமைப்பு அனைவரையும் கவரும் வகையில் இருகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

(Visited 4 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அறிவியல் & தொழில்நுட்பம்

தனிச் செயலி ஒன்றை அறிமுகம் செய்யும் Apple நிறுவனம்!

உலகில் மிகவும் பிரபலமாக Apple நிறுவனம் செவ்விசைப் பாடல்களுக்கென தனிச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது. Apple Music Classical என்ற அந்தச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அறிவியல் & தொழில்நுட்பம்

மார்ச் 28 திகதி வானத்தில் தோற்றவுள்ள ஆச்சரிய காட்சி! மக்கள் பார்க்க அரிய வாய்ப்பு

பூமிக்கு அருகே ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும் காட்சிகளை மக்கள் காண சந்தர்ப்பம் மார்ச் 28ம் திகதி ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை நடக்காத அரிய வானியல் நிகழ்வுகளில்

You cannot copy content of this page

Skip to content