மூளை – நரம்பு பாதிப்பு முதல் மாரடைப்பு வரை… உடலை பாதிக்கும் அதிக கோபம்
கோபம் என்பது இயற்கையான உணர்வு தான் என்றாலும் அளவுக்கு அதிகமாக கோபப்படுவது நல்லதல்ல. இது நமது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு பெரிய அளவில் தீங்கு விளைவிக்கும்.
நாள்பட்ட கோபம் மற்றும் மன அழுத்தம் மூளையின் நினைவாற்றலை பெரிதும் திறனை பாதிக்கலாம்.
ஏனென்றால், கார்டிசோல் போன்ற மன அழுத்த ஹார்மோன்கள் மூளையின் செயல்திறனை பாதிக்கின்றன. அளவிற்கு அதிகமான கோபம் நரம்பு மண்டலத்தையும் பாதிக்கிறதும். மேலும், உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம், மாரடைப்பு போன்ற பிரச்சனைகளையும் உண்டாக்கும். அதனால், கோபத்தை கட்டுப்படுத்துவது அவசியம்.
கோபத்தை கட்டுப்படுத்த நீங்கள் கடைபிடிக்க வேண்டியவை ( Tips To Control Anger)
தியான பயிற்சி
உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்த தியானம் பயிற்சிகளை மேற்கொள்ளலாம். இது நினைவாற்றலையும், தன்னம்பிக்கையையும் அதிகரிக்கும். தினமும் தியான பயிற்சி செய்வதன் மூலம், உங்கள் மனம் அமைதியாக இருக்கும். மேலும் உங்கள் இரத்த அழுத்த அளவும் கட்டுக்குள் இருக்கும். குறிக்கோள்களை நிறைவேற்ற உங்கள் உற்சாகம் அதிகரிக்கும்.
சுவாச பயிற்சி
சுவாசப் பயிற்சிகள் மூலம் உங்களை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும். உங்கள் மன அழுத்தத்தையும், கோபத்தையும் கட்டுப்படுத்தவும் உதவும். தொடர்ந்து சுவாசப் பயிற்சிகளைச் செய்வதன் மூலம் பதட்டம், மனச்சோர்வு மற்றும் மன அழுத்தம் ஆகியவை நீங்கும். இது தவிர, நமது நுரையீரலுக்கும் மிகவும் நன்மை பயக்கும். மூச்சுப் பயிற்சி செய்வதால் நல்ல ஹார்மோன்கள் உற்பத்தி தூண்டப்பட்டு, மன உற்சாகமாக இருக்கும்.
டயரி எழுதும் பழக்கம்
ஒருவரது வார்த்தைகளால் அல்லது செயல்களால் நீங்கள் மோசமாக உணர்ந்தால் அல்லது மிகவும் கோபமாக உணர்ந்தால், டயரி எழுதுவதன் மூலம் உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தலாம். டயரியில் உங்கள் எண்ணங்களை எழுதுவதன் மூலம் உங்கள் கோபத்தை அடக்கலாம். இது உங்களுக்குள் இருக்கும் எதிர்மறையை குறைத்து, நீங்கள் நன்றாக உணருவீர்கள்.
அமைதியாக சிந்தனை செய்தல்
கோபத்தில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்று ஒருவருக்கு புரியாமல், பெரிய தவறுகளை செய்யும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அமைதியாக உட்கார்ந்து, நீங்கள் ஏன் கோபப்படுகிறீர்கள் என்று யோசித்து, நீங்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்று சிந்தியுங்கள்.
நெருக்கமானர்களுடன் உணர்வுகளை பகிர்ந்து கொள்ளுதல்
ஏதேனும் சிக்கல் இருந்தால், நீங்கள் அதிகம் நம்பும் ஒருவருடன் உங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் கோபம் தணிந்து, உங்களுக்குள் இருக்கும் கசப்பு உணர்ச்சிகளும் குறையும்.
பிடித்த வேலையில் ஈடுபடுதல்
எல்லா கவலைகளையும் மறந்துவிட்டு உங்கள் முன்னேற்றம், சந்தோஷம் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்த முயற்சி செய்யுங்கள். உங்களுக்கு பிடித்த வேலையை செய்யுங்கள். இது தவிர, உடற்பயிற்சி போன்றவற்றைச் செய்வதன் மூலமும் நீங்கள் நன்றாக உணருவீர்கள். இது உங்கள் முழு உடலுக்கும் நிவாரணம் அளிக்கும் மற்றும் உங்கள் மனமும் அமைதியாக இருக்கும்.
மருத்துவரை அணுகவும்
அதிகப்படியான கோபம் உங்களுக்கு தீங்கு விளைவிக்கும். அத்தகைய சூழ்நிலையில், உங்களுக்கு உதவி தேவை என்று நீங்கள் உணர்ந்தால், நீங்கள் ஒரு மருத்துவர் அல்லது உளவியலாளரை அணுக வேண்டும். அவர்கள் உங்கள் நிலையைப் புரிந்துகொண்டு உங்களுக்கு சிகிச்சை தேவையா இல்லையா என்பதைத் தீர்மானிப்பார்கள்.