ஆன்மீக யாத்திரைக்காக இந்தியா வந்த பிரெஞ்சு பெண் துஷ்பிரயோகம் – ஏமாற்றும் இளைஞர்கள்!

ஆன்மீக யாத்திரைக்காக பிரான்ஸில் இருந்து இந்தியாவிற்கு சுற்றுலா சென்ற பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
சுற்றுலா வழிக்காட்டியாக நடித்த ஒருவர் தியானம் செய்யலாம் எனக் கூறி ஒதுக்குபுறம்பான இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
40 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண், தமிழ்நாட்டில் பல்வேறு புனிதப் பகுதிகளை ஆராய்ந்து கொண்டிருந்தபோது, 29 வயதான வெங்கடேசன் என்ற நபரைச் சந்தித்ததாகக் கூறப்படுகிறது.
பின்னர், ஒதுக்குப்புறமான காட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டு, தியானம் செய்வதாகக் கூறி வெங்கடேசன் அவரைத் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் முறைப்பாடு அளிக்கப்பட்ட பின்னர் அவர் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளார்.
விசாரணைகளின் பின்னர் குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.