பிரான்ஸில் Eiffel கோபுரத்தில் ஏறி பெண் படைத்த சாதனை

பிரான்ஸில் பிரெஞ்சுத் திடல்தட வீரர் அனூக் கார்னியே கயிற்றில் ஏறும் உலகச் சாதனையை முறியடித்துள்ளார்.
34 வயது கார்னியே 100 மீட்டர் உயரத்தைக் கயிற்றில் ஏறி Eiffel கோபுரத்தின் இரண்டாம் தளத்தைச் சென்றடைந்தார்.
சாதனையைப் படைத்த கார்னியேவால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. பல்வேறு தடைகளைக் கடக்கும் சாகசப் போட்டியில் இரண்டு முறை உலக வெற்றியாளர் பட்டத்தை அவர் 2022ஆம் ஆண்டில் பெற்றிருந்தார்.
புற்றுநோய்க்கு எதிரான “League Against Cancer” எனும் அமைப்புக்காக நிதி திரட்ட அவர் இந்த முயற்சியில் இறங்கியதாகக் கூறினார்.
கார்னியே 18 நிமிடத்தில் 100 மீட்டர் உயரம் ஏறி உலகச் சாதனை படைத்துள்ளார்.
(Visited 43 times, 1 visits today)