பிரான்ஸ் பிரதமரின் வாக்குறுதி – முடிவை மாற்றிய விவசாயிகள்
பிரான்ஸில் A13 நெடுஞ்சாலையை விவசாயிகள் முடக்கி வைத்திருந்த நிலையில், பிரதமரின் அறிவிப்பை தொடர்ந்து அது நீக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை மாலை சுங்கச்சாவடிக்கு அருகே விவசாயிகள் தங்களது உழவு இயந்திரத்தை நிறுத்தி வைத்து, வீதியின் இரு பக்கங்களையும் முடக்கியிருந்தனர்.
இல் து பிரான்ஸ் மாகாண முதல்வர் Valérie Pécresse அவர்களைச் சென்று சந்தித்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை பிரதமர் கேப்ரியல் அத்தால் சில சலுகைகளை வெளியிட்டார்.
அவற்றினை விவசாயிகள் முழுமனதாக ஏற்றுக்கொள்ளவில்லை என்றபோதும், A13நெடுஞ்சாலை முற்றுகையை நிறுத்தியுள்ளனர். அவர்கள் அங்கிருந்து இரவு நேரத்தில் கலைந்து சென்றனர்.
(Visited 16 times, 1 visits today)





