இந்தியா

இந்தியா வருகிறார் பிரான்ஸ் ஜனாதிபதி!

பிரான்ஸ் French ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் Emmanuel Macron அடுத்த மாதம் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்கின்றார்.

இந்திய பிரதமரின் சிறப்பு பிரதிநிதியாக வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் S Jaishankar, பிரான்ஸ் ஜனாதிபதியை நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதன்போது தமது இந்திய விஜயத்தை பிரான்ஸ் ஜனாதிபதி உறுதிப்படுத்தியுள்ளார்.

பிரான்ஸில் கடந்த வருடம் சர்வதேச செயற்கை நுண்ணறிவு செயல்பாட்டு AI உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் இந்திய பிரதமர் மோடியும் பங்கேற்றிருந்தார்.

இம்மாநாட்டின்போது தான் இந்தியா வருவதற்கு திட்டமிட்டுள்ளார் என்ற தகவலை பிரான்ஸ் ஜனாதிபதி வெளியிட்டிருந்தார்.

அவரின் டெல்லி விஜயத்தின்போது இரு நாடுகளுக்கும் இடையில் முக்கிய சில ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளன.

Dila

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!