அமெரிக்காவில் அதிகரித்து வரும் மோசடி – பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்!
அமெரிக்காவில் மெய்நிகர் கடத்தல் மோசடி அதிகரித்து வருவதாக FBI அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குற்றவாளிகள் சமூக ஊடகங்களில் இருந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைத் திருடி, பணம் கோருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மோசடி செய்பவர்கள் பாதிக்கப்பட்டவர்களை குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு, அன்புக்குரியவரை கடத்தியதாக பொய் கூறி கப்பம் கோருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு மோசடியான அழைப்புகள், அல்லது செய்திகள் கிடைக்கப்பெற்றால் அதனை உறுதிப்படுத்துவதற்காக அன்புக்குறியவர்களுடன் பேசும், பிரத்தியேக வார்த்தைகளை பயன்படுத்தி உரையாடல்களை மேற்கொள்ளுமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
அதேபோல் மீட்கும் தொகையை செலுத்துவதற்கு முன்பு அன்புக்குரியவர்களைத் தொடர்பு கொள்ள முயற்சிக்குமாறும் FBI அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
சந்தேகத்திற்குரிய மெய்நிகர் கடத்தல் மோசடிகள் குறித்து பொதுமக்கள் FBI இணைய குற்ற மையத்தில் முறைப்பாடு செய்யலாம் எனவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.





