மத்திய கிழக்கிற்கான விமானசேவைகளை நிறுத்திய பிரான்ஸ்
மத்திய கிழக்கிற்கான விமானசேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக பிரான்ஸ் விமான சேவை அறிவித்துள்ளது.
தங்கள் சேவையை மீண்டும் நிறுத்தியுள்ளதாக எயார் பிரான்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை பரிசில் இருந்து Beirut மற்றும் Tel Aviv ஆகிய நகரங்களுக்கு புறப்பட இருந்த விமானம் இரத்துச் செய்யப்பட்டது.
மறு அறிவித்தல் வரை சேவைகள் இயக்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் நிலமைகளை மிக நெருக்கமாக அவதானிப்பதாகவும், விமான சேவைகளை இயக்குவதில் உள்ள ஆபத்து தொடர்பில் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை Hezbollah அமைப்பினர் மேற்கொண்ட தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டும், 3,000 பேர் வரை காயமடைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.





