இன்றைய முக்கிய செய்திகள் உலகம்

ஐரோப்பாவில் ரஷ்யாவின் முக்கிய எதிரியாக மாறிய பிரான்ஸ் – புட்டின் அறிவிப்பால் அச்சம்

ரஷ்யா, ஐரோப்பாவில் தனது முக்கிய எதிரியாக பிரான்ஸை அடையாளப்படுத்தியுள்ளது என அந்த நாட்டின் இராணுவத் தலைவர் திரி புர்கார்ட் தெரிவித்துள்ளார்.

உக்ரைனுக்கு பிரான்ஸ் வழங்கும் நிலையான ஆதரவுக்கு பதிலளிக்கும் வகையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் எடுத்த முக்கிய முடிவாக பார்க்கப்படுகிறது.

தற்போது நேரடி இராணுவத் தாக்குதல்கள் நிகழ வாய்ப்பில்லை என்றாலும், ரஷ்யா பரிசை குறிவைக்கும் வகையில் தகவல் அட்டூழியம், இணைய தள தாக்குதல்கள், உளவுத்துறை நடவடிக்கைகள் உள்ளிட்ட கலப்பு தாக்குதல்களை மேற்கொள்ளும் அபாயம் உள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடலடித்தள நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் விண்வெளி செயற்கைக்கோள்கள் வழியாக ரஷ்யா உளவுத்துறை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. மேலும், ரஷ்ய விமானங்களுடனான வான்வெளி மோதல்களும் இடையிடையே நடைபெறுகின்றன.

அட்லாண்டிக் மற்றும் மெடிதெரேனியன் கடல்களில் ரஷ்யாவின் அணுசக்தி நீர்மூழ்கிக்கப்பல்கள் பிரான்ஸ், பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளை கண்காணித்து வருகின்றன. இது பிரான்ஸின் பாதுகாப்பை புதிய விதத்தில் சவாலுக்குள்ளாக்கி வருகிறது.

இந்த புதிய நிலைமையால், ஐரோப்பா முழுவதும் பாதுகாப்பு ஆய்வுகள் மற்றும் முன்னெச்சரிக்கைகள் அதிகரிக்கப்படக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

(Visited 22 times, 1 visits today)

SR

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்