ஈரான் உளவாளிகள் நால்வர் லண்டனில் கைது!
ஈரான் உளவுத் துறையுடன் தொடர்பு வைத்துள்ளனர் எனச் சந்தேகிக்கப்படும் நால்வர் லண்டனில் London கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஈரானியர் ஒருவரும், பிரிட்டிஷ் மற்றும் ஈரான் குடியுரிமை கொண்ட மூவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
லண்டனில் உள்ள யூத சமூகத்தினர் மற்றும் அவர்களின் இருப்பிடங்களைக் இவர்கள் கண்காணித்து வந்துள்ளனர் என தகவல் கிடைத்துள்ளது.
இது தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டது. இதன் ஓர் அங்கமாக Watford மற்றும் Barnet உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடுதல் வேட்டை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போதே கைது இடம்பெற்றுள்ளது. மேலும், சந்தேக நபர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கினர் எனக் கருதப்படும் ஆறு நபர்கள் Harrow. பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கை வெளிநாட்டு உளவு அமைப்புகளின் சதித்திட்டங்களை முறியடிக்கும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளது.





