இலங்கை செய்தி

பொப் மாலி எனப்படும் சமிந்த தப்ரு உள்ளிட்ட நால்வர் கைது

போதைப்பொருள் கடத்தல்காரரான பொப் மாலி எனப்படும் சமிந்த தப்ரு உள்ளிட்ட நான்கு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஓபத்த பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆகஸ்ட் 31, 2021 அன்று பேருவளை கடற்கரையில் முந்நூறு கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான 288 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேக நபரும் இந்தபொப் மாலி ஆவார்.

43 வயதான சந்தேக நபர் பேருவளை பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் அவர் மாலபே தலஹேன பிரதேசத்தில் தற்காலிகமாக வசிப்பவர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொப் மாலி மற்றும் ஏனைய நால்வரும் நாளை உடுகம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!