இலங்கையில் எரிவாயு நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் நால்வர் பலி – நால்வர் படுகாயம்

குருநாகல், வெஹெர பகுதியில் உள்ள எரிவாயு நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலிருந்த மேலாளர் உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று இரவு 11 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், மேலும் நான்கு பேர் தீ விபத்தில் காயமடைந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காயமடைந்தவர்கள் குருநாகல் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
குருநாகல் மாநகர சபை தீயணைப்புத் துறையுடன் இணைந்து தற்போது தீ அணைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று இரவு எரிவாயு நிரப்ப வந்த லாரியில் 6,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு சேமிப்பு தொட்டிகளில் ஒன்று வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.
சம்பவம் தொடர்பில் குருநாகல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 8 times, 8 visits today)