பிரித்தானியாவின் போல்டனில் கோர விபத்து – நால்வர் பலி
பிரித்தானியாவின் போல்டன் பகுதியில் ஏற்பட்ட வீதி விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் ஐவர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விபத்து விகன் (Wigan)வீதியில் இன்று இடம்பெற்றதாக கிரேட்டர் மான்செஸ்டர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கார்கள் இரண்டு மோதுண்டதில் இந்த விபத்து சம்பவித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





