இலங்கையின் சாதனையை பாராட்டிய முன்னாள் சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ
இலங்கையின் 02 மில்லியன் சுற்றுலா பயணிகளின் வருகையை வரவேற்றுள்ள இலங்கையின் சாதனையை முன்னாள் சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ பாராட்டியுள்ளார்.
2024ம் ஆண்டிற்கு 02 மில்லியன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை அதிகாரிகள் அடைய முடிந்துள்ளதாகவும் ஹரின் பெர்னாண்டோ ‘X’ல் பதிவிட்டுள்ளார்.
கடந்த அரசாங்கம் நிர்ணயித்த 2025 ஆம் ஆண்டிற்கான 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் இலக்கை அரசாங்கம் அடைய முடியும் என்று அவர் மேலும் நம்பிக்கை தெரிவித்தார்.
(Visited 11 times, 1 visits today)





