இலங்கை செய்தி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் கைது!

அரச புலனாய்வுப் பிரிவின் State Intelligence Services (SIS)
முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே Suresh Saleh கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வு பிரிவின் CID குழுவொன்றினாலேயே பெலியகொட பகுதியில் வைத்து இன்று (25) அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் இவர் சந்தேக நபராகக் கருதப்படுகின்றார்.

மேற்படி தாக்குதல் சம்பவம் நடைபெறும் காலப்பகுதியில் மலேசியாவிலுள்ள இலங்கை தூதுரகத்தின் ஆலோசகராக பதவி வகித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் சுரேஷ் சலேவுக்கு தொடர்பு இருக்கலாம் என ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் பலர் அக்காலப்பகுதியில் குற்றஞ்சாட்டி இருந்தனர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!