பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு பிணை!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீதான ஊழல் குற்றச்சாட்டை பாகிஸ்தான் உயர்நீதிமன்றம் இடைநீக்கம் செய்துள்ளது.
இம்ரான் கானை ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது,
செவ்வாய்க்கிழமை அவர் சிறையில் இருந்து வெளியேறுவாரா என்பது உடனடியாகத் தெரியவில்லை என அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
2018ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் பிரதமராக இருந்தபோது அரச பரிசுகளை சட்டவிரோதமாக விற்ற குற்றச்சாட்டில் கடந்த 5ஆம் திகதி இம்ரான் கானுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அத்துடன் தண்டனையின் விளைவாக, அந்த நாட்டின் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் தேர்தலில் போட்டியிட அவருக்கு ஐந்தாண்டுகளுக்கு தடையும் விதிக்கப்பட்டது.
பாகிஸ்தானில் எதிர்வரும் மாதங்களில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
(Visited 3 times, 1 visits today)