அரசியல் இலங்கை செய்தி

முன்னாள் அமைச்சர் பிரசன்னவிடம் CID விசாரணை!

“ தேசிய மக்கள் சக்தி NPP தேர்தல் காலத்தில் கூறியது பொய்யென்பதை நாட்டு மக்கள் தற்போது உணர ஆரம்பித்துள்ளனர்.”- என்று முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க Prasanna Ranatunga தெரிவித்தார்.

குற்றப் புலனாய்வு பிரிவுக்கு CID அவர் இன்று (02) விசாரணைக்கு வந்திருந்தார்.

இதன்போது ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“கெஹெல்பத்தர பத்மே (பாதாள குழு உறுப்பினர்) என்பவர் எமது ஊரைச் சேர்ந்தவர்.

அரசியல் ரீதியில் அவர் எம்முடன் இணைந்து செயல்பட்டாரா என்பது பற்றி விசாரிக்கவே சிஐடிக்கு அழைக்கப்பட்டிருந்தேன்.

கெஹெல்பத்தர பத்மேவுடன் எனக்கு தொடர்பு இல்லை. அவருடன் தந்தையுடன் எமக்கு தொடர்பு இருக்கின்றது.

தமது இயலாமையை மூடிமறைப்பதற்காகவே அரசாங்கம் எம்மை விசாரணைக்கு அழைக்கின்றது.

இந்த அரசாங்கம் கூறியது பொய்யென்பதை மக்கள் உணர ஆரம்பித்துள்ளனர். இதனால் அரசாங்கம்மீது அதிருப்தி உருவாகியுள்ளது.” – என்றார் பிரசன்ன ரணதுங்க.

 

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!