ஐரோப்பா செய்தி

முன்னாள் தொழிலாளர் கட்சி எம்.பி. காலமானார்

முன்னாள் தொழிற் கட்சி எம்.பி. மற்றும் முன்னாள் அமைச்சர் பில் வூலாஸ் (Bill Woolas) தனது 66 வயதில் காலமாகியுள்ளார்.

அவர் பல ஆண்டுகளாக மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக அவரது உறவினர்கள் கூறியுள்ளனர்.

பில் வூலாஸ் 1997 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை டோனி பிளேர் (Tony Blair) மற்றும் கோர்டன் பிரவுன் (Gordon Brown) அரசாங்கங்களில் ஓல்ட்ஹாம் ஈஸ்ட் (Oldham East)மற்றும் சாடில்வொர்த் (Saddleworth)தொகுதிகளுக்கான எம்.பி.யாக பணியாற்றியுள்ளார்.

உள்ளூர் அரசு, சுற்றுச்சூழல் மற்றும் குடியேற்றம் உள்ளிட்ட பல அமைச்சுப் பதவிகளையும் அவர் வகித்துள்ளார்.

2010 ஆம் ஆண்டு, ஓல்ட்ஹாம் கிழக்கு மற்றும் சாடில்வொர்த் தொகுதிக்கான வெற்றிப் பிரச்சாரத்தில் அவர் தவறான அறிக்கைகளை வெளியிட்டதாக நீதிமன்றம் அறிவித்தது.

இதன்பின்னர் அவர் அரசியலில் இருந்து மூன்று ஆண்டுகள் தடை செய்யப்பட்டார். தேர்தலில் அவர் 103 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற போதிலும் அந்த தேர்தல் முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது என நீதிமன்றம் அறிவித்தது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!