இந்தியா செய்தி

உத்தரகாண்டில் மகளை பாலியல் வன்கொடுமை செய்த முன்னாள் விமானப்படை அதிகாரிக்கு சிறைத்தண்டனை

டேராடூனில்(Dehradun) உள்ள ஒரு நீதிமன்றம், தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக முன்னாள் விமானப்படை அதிகாரிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

தனது மகளைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பான தந்தை, அவளுடைய உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை அழித்துவிட்டதாகவும் அத்தகைய குற்றவாளியிடம் எந்த கருணையும் காட்ட முடியாது என்றும் நீதிமன்றம் தீர்ப்பின் போது தெரிவித்துள்ளது.

மேலும், சிறப்பு நீதிபதி அர்ச்சனா சாகர்(Archana Sagar), குற்றவாளிக்கு ரூ.25,000 அபராதமும் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

தனக்கு ஐந்து அல்லது ஆறு வயதாக இருந்தபோது தனது தந்தை தன்னை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யத் தொடங்கியதாக பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இது சாதாரணமானது என்றும் ஒவ்வொரு தந்தையும் தனது மகளை இப்படித்தான் நேசிக்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!