கனடாவில் வானத்திலிருந்து விழுந்த மீனால் பற்றி எரிந்த காடுகள் – வெளியான அதிர்ச்சி தகவல்

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தின் Ashcroft நகரில், வானத்திலிருந்து மீன் விழுந்ததில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒஸ்பிரே ரகப் பறவை ஒரு மீனைக் கவ்வியபடி பறந்து சென்ற போது அந்த மீனை அது தவறவிட்டு கீழே விழுந்ததில் அது நேராக மின்கம்பியின் மீது விழுந்துவிட்டது.
இதன் காரணமாக மின்கம்பியில் தீ பிடித்து, சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடையையும் ஏற்படுத்தியது.
தீயணைப்பு துறையினர் தீயின் காரணத்தை விசாரித்தபோது, இந்த அபூர்வமான காரணம் கண்டறியப்பட்டதில் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து, Ashcroft தீயணைப்பு துறை தங்களது Facebook பக்கத்தில் பதிவிட்டுள்ளது. “வானத்தில் இருந்து விழுந்த ஒரு மீன்… அது தீயின் காரணமாக மாறும் என்பதை யாரும் எதிர்பார்க்க முடியாது!” என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அந்த மீன் கவ்வப்பட்ட ஆறு, சம்பவ இடத்திலிருந்து சுமார் 3 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.