கனடாவில் காட்டுத்தீ பாதிப்பு : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
கனடாவின் ஆல்பர்டா மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயினால், 6 இலட்சத்து 16 ஆயிரம் காடுகள் எரிந்து சாம்பல் ஆகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாகாணத்தில் 86 இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ள நிலையில், 24 பகுதிகளில், கட்டுக்கடங்காமல் பரவியுள்ளது.
பரவலான காட்டுத்தீயினால் காற்றின் தரம் மோசமாகியுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு பணிகளுக்கு அமெரிக்கா உதவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





