கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய வெளிநாட்டவர் – வைத்தியசாலையில் அனுமதி
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கொக்கெய்ன் ரக போதைப்பொருளை விழுங்கிய நிலையில் கைதான வெளிநாட்டுப் பிரஜை தொடர்ந்தும் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
அவரது வயிற்றில் மேலும் கொக்கெய்ன் வில்லைகள் இருக்கின்றதா? என்பதைக் கண்டறிவதற்காக அவர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 4 கோடி ரூபாய் பெறுமதியான கொக்கேய்ன் ரக போதைப்பொருளைக் கடத்தி வந்த வெளிநாட்டு பிரஜையொருவர் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபரைச் சுங்கப் பகுதியில் ஸ்கேனர் மூலம் சோதனை செய்த அதிகாரிகள், அவரது வயிற்றுக்குள் போதைப்பொருள் அடங்கிய வில்லைகள் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.
இதனையடுத்து சந்தேக நபர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், அவரது வயிற்றிலிருந்து 56 கொக்கேய்ன் ரக போதைப்பொருள் வில்லைகள் மீட்கப்பட்டன.
சியேரா லியோனைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.