சிங்கப்பூரில் பாரிய அளவில் தொழில் பெற்ற வெளிநாட்டு ஊழியர்கள்!
சிங்கப்பூரில் கடந்த ஆண்டு வெளிநாட்டு ஊழியர்களின் அதிகமானோருக்கு வேலை கிடைத்ததாக கூறப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டில், சிங்கப்பூரில் வேலையில் இருந்த ஊழியர்களின் மொத்த எண்ணிக்கை 88,400 ஆக உயர்ந்துள்ளது. அதே போல, 2022 ஆம் ஆண்டை விட ஆட்குறைப்பு கடந்த ஆண்டு இரண்டு மடங்காக அதிகரித்து 14,590 ஆக இருந்தது.
வெளிநாட்டு ஊழியர்கள் முக்கியமாக கட்டுமானம், உற்பத்தி, நிதி துறை போன்ற வேலைகளில் அதிகம் எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்ச்சியான ஆறு காலாண்டுகள் சரிவுக்குப் பிறகு, 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வேலை காலியிடங்களின் எண்ணிக்கை 79,800 ஆக சற்று அதிகரித்தது.
இந்த ஊழியர் சந்தை புள்ளி விவரங்களை இன்று மார்ச் 14 அன்று மனிதவள அமைச்சகம் (MOM) வெளியிடப்பட்டது.
வேலை இழந்த ஊழியர்களில், 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் அவர்கள் வேலை செய்த நிறுவனங்களின் சீரமைப்பு பணிகளால் தங்கள் வேலைகளை இழந்ததாக சொல்லப்பட்டுள்ளது.