இலங்கை விமானங்களை ஓட்ட வெளிநாட்டு விமானிகள் வருகிறார்கள்

இலங்கை விமான சேவைக்கு வெளிநாட்டு விமானிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அரசாங்கம் தற்போது அனுமதி வழங்கியுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
விமானிகளின் காலிப் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக மூத்த செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
வெளிநாட்டு விமானிகளும் இதற்கு விண்ணப்பித்துள்ளனர் என்றார்.
எவ்வாறாயினும், தேசிய விமான சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யும் காலம் தொடர்பில் தாம் இன்னும் உறுதியான தீர்மானத்தை எடுக்கவில்லை என ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு விமானிகளுக்கான நேர்காணலும் விரைவில் நடத்தப்படும்.
சுமார் 03 வருடங்களுக்கு முன்னரும் தம்முடன் வெளிநாட்டு விமானிகள் இவ்வாறு பணிபுரிந்ததாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மேலும் தெரிவித்துள்ளது.
(Visited 8 times, 1 visits today)