அமெரிக்காவில் முதல் முறையாக குற்றவாளியின் பெற்றோருக்கு நீதிமன்றம் விதித்த தண்டனை!
அமெரிக்காவின் மிச்சிகனில் நான்கு பாடசாலை மாணவிகளை சுட்டுக் கொன்ற மாணவனின் பெற்றோருக்கு 10 முதல் 15 வருடங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இருவரின் தண்டனையையும் 7 வருடங்களாக குறைக்க பரிந்துரை செய்யப்பட்டிருந்த போதிலும், தண்டனையை குறைக்க வேண்டாம் என அரச சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அதன்படி, அமெரிக்காவில் பள்ளியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் குற்றவாளியின் பெற்றோர் தண்டிக்கப்படுவது வரலாற்றில் இதுவே முதல்முறை.
ஜேம்ஸ் மற்றும் ஜெனிபர் க்ரம்லி ஆகியோர் இன்று (10.04) முதன்முறையாக நீதிமன்றத்தில் ஆஜராகி தமது மகனின் குற்றத்திற்காக வருத்தம் தெரிவித்தனர்.
அந்த நேரத்தில் 15 வயதாக இருந்த ஈதன் க்ரம்லி, 2021 இல் ஆக்ஸ்போர்டு உயர் கல்லூரியில் தனது சக மாணவர்களைக் குறிவைத்தார். இதில் 4 பேர் உயிரிழந்தனர் மற்றும் 7 பேர் காயமடைந்தனர்.
ஈதன் க்ரம்லியின் பெற்றோர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள முக்கிய குற்றச்சாட்டுகள், அவர்கள் தங்கள் மகனின் மனநலக் கோளாறை சமாளிக்காமல், அவருக்கு துப்பாக்கி வாங்கித் தந்ததுதான்.
ஈதன் க்ரம்லி தற்போது ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்.