இலங்கை வரலாற்றில் முதல் முறையாக முட்டைக்கு 18 சதவீத வற் வரி விதிப்பு!

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக முட்டை விற்பனையின் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு இன்று முதல் 18 சதவீதம் வற் எனப்படும் பெறுமதி சேர் வரி விதிக்கப்படுகிறது.
வற் வரி எனப்படும் பெறுமதி சேர் வரி விதிக்கப்பட்டாலும், முட்டைகளின் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எனினும் முட்டைகள் மீது வற் எனப்படும் பெறுமதி சேர் வரி அமுல்படுத்துவது நியாயமற்றது எனவும், இதனால் இந்த தொழில்துறையில் வீழ்ச்சி ஏற்படும் எனவும் சங்கம் சுட்டிக் காட்டியுள்ளது.
சந்தையில் தற்போது ஒரு முட்டையின் சில்லறை விலை 30 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
(Visited 29 times, 1 visits today)