உணவுப் பஞ்சத்தால் சிக்கி தவிக்கும் சிம்பாப்வே – 200 யானைகளைக் கொல்ல திட்டம்
சிம்பாப்வேயில் உணவுப் பற்றாக்குறையைச் சமாளிக்க 200 யானைகளைக் கொல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
அங்கு 100,000 யானைகள் வாழ்கின்றன. அண்டை நாடான போட்ஸ்வானாவுக்குப் பிறகு உலகில் ஆக அதிகமான யானைகள் கொண்ட நாடு சிம்பாப்வேவாகும்.
சிம்பாப்வேயில் அளவுக்கு அதிகமான யானைகள் இருப்பதாக அந்நாட்டுச் சுற்றுப்புற அமைச்சர் நாடாளுமன்றத்தில் கூறினார்.
மனிதர்களுடன் யானைகள் அதிகம் மோதும் இடங்களில் யானைகள் வேட்டையாடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அண்டை நாடான நமீபியா அண்மையில் 7000க்கும் அதிகமான வனவிலங்குகளைக் கொல்லவிருப்பதாக அறிவித்தது. அவற்றில் யானைகள், வரிக்குதிரைகள் போன்றவை அடங்கும்.
பஞ்சத்தால் அவதிப்படும் மக்களுக்கு விலங்குகளின் இறைச்சியை வழங்கவிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நமீபியாவில் ஏற்கெனவே 160 விலங்குகள் கொல்லப்பட்டன.
(Visited 1 times, 1 visits today)