தென்கிழக்கு ஆசியாவில் 1000 வேலைவாய்ப்புகளை குறைக்கும் உணவு விநியோக செயலி!
தென்கிழக்கு ஆசியாவின் முன்னணி ரைட்-ஹைலிங் மற்றும் உணவு விநியோக செயலியான கிராப், 1,000 வேலைகளை குறைப்பதாக கூறியுள்ளது.
செலவுகளைக் குறைக்கவும், நீண்ட காலத்திற்கு மலிவு விலையில் சேவைகளை உறுதிப்படுத்தவும் இந்த ஆட்குறைப்பு தேவை என்று நிறுவனத்தின் முதலாளி கூறினார்.
சிங்கப்பூரை தளமாகக் கொண்ட இந்த நிறுவனம் எட்டு தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தங்கள் சேவைகளை வழங்கி வருகிறது.
2018 ஆம் ஆண்டில், அமெரிக்காவை தளமாகக் கொண்ட போட்டியாளரான Uber இன் செயல்பாடுகளை Grab எடுத்துக் கொண்டது.
ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், தலைமை நிர்வாகி அந்தோணி டான், புதிய தொழில்நுட்பத்தின் தாக்கம் மற்றும் கடன் வாங்கும் செலவுகள் அதிகரித்து வருவதையும் எடுத்துக் கூறியுள்ளார்.
ஜெனரேட்டிவ் AI [செயற்கை நுண்ணறிவு] போன்ற தொழில்நுட்பங்கள் அசுர வேகத்தில் உருவாகி வருகின்றன. மூலதனத்தின் விலை உயர்ந்துள்ளது, இது போட்டி நிலப்பரப்பை நேரடியாக பாதிக்கிறது” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.