NPP அரசுக்கு பொன்சேகா பாராட்டு: ஆதரவு வழங்கவும் பச்சைக்கொடி!
“தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திலுள்ள அமைச்சர்கள் ஊழல், மோசடிகளில் ஈடுபடவில்லை. இதனை பாராட்ட வேண்டும்.”
இவ்வாறு முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா Sarath Fonseka தெரிவித்தார்.
“இலங்கையில் கடந்த காலங்களில் சட்டம், ஒழுங்கு இருக்கவில்லை. பணம் இருக்கும் இடத்தில்தான் நீதி இருந்தது. ஊழல், மோசடிகள் இடம்பெற்றன. குறுக்கு வழியில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
இதனால் பொதுமக்கள்தான் பெரிதும் பாதிக்கப்பட்டனர். ஆனால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் உள்ளவர்கள் ஊழல், மோசடிகளில் ஈடுபடவில்லை. இதற்குரிய பாராட்டை அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
அதேபோல நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் விடயங்களை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும். அதனை நோக்கிய பயணத்தின்போது எமது ஆதரவு வழங்கப்படும்.” எனவும் பொன்சேகா குறிப்பிட்டார்.





