சவுதி அரேபியாவை மூழ்கடித்த வெள்ளம் – சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!
சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் பெய்த கனமழையால் நகரம் முழுவதும் குறிப்பிடத்தக்க வெள்ளப்பெருக்கு மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சவுதி அரேபிய ஊடகங்களின் அறிக்கையின்படி, கனமழைக்குப் பிறகு கடுமையான வெள்ளம் நகரத்தை மூழ்கடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் தேசிய வானிலை ஆய்வு மையத்தின் (NCM) சிவப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
மீட்பு மற்றும் சிவில் பாதுகாப்பு குழுக்கள் விழிப்புடன் இருப்பதாக கூறப்படுகிறது,
வெள்ளம் ஏற்படும் பகுதிகளைத் தவிர்த்து வீட்டிற்குள் இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றவும், தண்ணீர் வடியும் வரை தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும் அதிகாரிகள் அனைவரையும் கேட்டுக்கொண்டுள்ளனர்.





