வெள்ள நிவாரண உதவிகள் அவசியமில்லை – தென்கொரியா மீது கடும் கோபத்தில் வடகொரியா
தமது நாட்டில் வெள்ளத்தால் ஏற்பட்ட சேதத்தின் அளவைத் தென்கொரிய ஊடகங்கள் தவறாகப் மிகைப்படுத்திக் காட்டியதாக வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் (Kim Jong Un), குற்றம் சுமத்தியுள்ளார்.
தென்கொரியா வடகொரியாவுக்கு வெள்ள நிவாரண உதவி வழங்க முன்வந்த சில நாட்களுக்குப் பின், கிம்மின் கருத்துகள் வந்துள்ளன.
வடகொரியாவின் பெயரைத் தென்கொரியா கெடுக்கப் பார்ப்பதாக இவர் கூறினார்.
சின்விஜு (Sinuiju) பகுதியில் மரணம் ஏதும் நேரவில்லை என்றும், வடகொரிய விமானப்படை மீட்புப்பணிகளை வெற்றிகரமாக முடித்துவிட்டன என்றும் அவர் குறிப்பிட்டார்.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியிருக்கக்கூடும் என்று தென்கொரிய ஊடகங்கள் கூறுவதை அவர் மறுத்துள்ளார்.
தம் நாடு, நிவாரண உதவிக்காக தேசியத் தற்காப்பை ஒருபோதும் தியாகம் செய்யாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தென்கொரியா வழங்க முற்பட்ட உதவியை வடகொரியா மறுக்கும் என்பதை உணர்த்தும் வகையில் அவரது கருத்துகள் அமைந்தன.