MH370 விமானம் – மாயமான 08 பேரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க உத்தரவு!
சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு மலேசிய ஏர் லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த நிலையில் காணாமல்போன 08 பேரின் குடும்பத்தினருக்கு தலா 2.9 மில்லியன் யுவான் ($410,000) இழப்பீடு வழங்க வேண்டும் என பெய்ஜிங் (Beijing) நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இது தொடர்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில், தங்கள் அன்புக்குரியவரின் மரணம், இறுதிச் சடங்கு செலவுகள் மற்றும் உணர்ச்சி ரீதியான துயரத்தால் ஏற்பட்ட சேதங்களுக்காக ஒவ்வொரு குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகளுக்கு என்ன ஆனது என்பது தெரியவில்லை என்றாலும், அவர்கள் சட்டப்பூர்வமாக இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2014 இல் கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங்கிற்குப் புறப்பட்ட பிறகு காணாமல் போன விமானத்தில் 239 பயணிகள் மற்றும் பணியாளர்கள் இருந்தனர்.
பல ஆண்டுகளாகத் தேடுதல்கள் இருந்தபோதிலும் விமானத்திற்கு என்ன நடந்தது என்பது மர்மமாகவே உள்ளது.




