விமானி கடவுச்சீட்டை மறந்ததால் மாற்றி அனுப்பப்பட்ட விமானம்!

அமெரிக்காவிலிருந்து சீனா நோக்கிப் பயணித்த விமானமொன்றின் விமானி தமது கடவுச்சீட்டை மறந்து சென்றதால் குறித்த விமானம் மாற்றி அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்சில் இருந்து 257 பயணிகள் மற்றும் 13 பணியாளர்களுடன் சீனாவிற்குப் பயணித்த விமானமே இவ்வாறு மாற்றி அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விமானம் சுமார் 2 மணிநேரம் தாமதமடைந்தமையின் காரணமாக அது சென்பிரான்சிஸ்கோ நோக்கி மாற்றி அனுப்பப்பட்டதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த விமானத்தின் நிறுவனம் இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டு, இதனால் பாதிப்படைந்த தரப்பினரிடம் மன்னிப்பு கோரியுள்ளது.
விமானி தமது கடவுச் சீட்டை மறந்து சென்றமையினால் மற்றுமொரு விமானி பணிக்கு அமர்த்தப்பட்டதாகவும் அதனால் விமானம் தாமதமடைந்ததாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.