அமெரிக்காவில் கொள்ளையில் ஈடுபட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இருவர் உட்பட 5 பேர்
அமெரிக்காவில் ஒரு சிறு வணிக உரிமையாளரின் வீட்டில் அவரது குழந்தைகள் முன்னிலையில் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேரில் இரண்டு இந்திய வம்சாவளியினர் அடங்குவர்.
நியூயார்க்கின் ஆரஞ்சு கவுண்டியில் துப்பாக்கி முனையில் வீடு புகுந்து கொள்ளையடித்ததாக 26 வயது பூபிந்தர்ஜித் சிங், திவ்யா குமாரி, 22 வயது எலிஜாய் ரோமன், 45 வயது கோரி ஹால் மற்றும் 24 வயது எரிக் சுவாரெஸ் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
பிரதிவாதிகள் கைது செய்யப்பட்டு, அமெரிக்க மாஜிஸ்திரேட் நீதிபதி விக்டோரியா ரெஸ்னிக் முன் வைட் ப்ளைன்ஸ் ஃபெடரல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக நியூயார்க்கின் தெற்கு மாவட்டத்தின் அமெரிக்க வழக்கறிஞர் அலுவலகம் இந்த வாரம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அவர்கள் மீது அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கக்கூடிய கொள்ளை குற்றச்சாட்டு ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
வன்முறைக் குற்றத்தை மேலும் தூண்டும் வகையில் துப்பாக்கியைப் பயன்படுத்துதல், எடுத்துச் சென்றல், வைத்திருந்தல் மற்றும் மிரட்டுதல் ஆகிய குற்றச்சாட்டுகளை சிங், ரோமன், ஹால் மற்றும் சுவாரெஸ் மீது சுமத்தப்பட்டுள்ளது. இதற்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்.