ஒடிசாவில் 12 வயது சிறுவனைக் கொலை செய்த ஐந்து மதரசா மாணவர்கள் கைது

ஒடிசாவின் நயாகர் மாவட்டத்தில் உள்ள ஒரு மதரஸாவின் ஐந்து மாணவர்கள், 12 வயது சிறுவனைக் கொன்று, அவரது உடலை கழிவுநீர் தொட்டியில் வீசியதாகக் கூறி கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் செப்டம்பர் 2 ஆம் தேதி நயாகர் மாவட்டத்தின் ரன்பூர் காவல் நிலைய எல்லைக்குள் அமைந்துள்ள ஒரு மதரஸாவில் நடந்துள்ளது.
செப்டம்பர் 3 ஆம் தேதி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர், மேலும் 12 முதல் 15 வயதுடைய குற்றம் சாட்டப்பட்ட சிறுவர்கள் காவலில் எடுக்கப்பட்டதாக மூத்த காவல்துறை அதிகாரி சுபாஷ் சந்திர பாண்டா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கட்டாக் மாவட்டத்தில் உள்ள படம்பா பகுதியைச் சேர்ந்த சிறுவன், ஜூனியர் மாணவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகத்தை ஆசிரியர்களிடம் கூறுவதாக சீனியர் மாணவர்களை மிரட்டியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த ஆறு மாதங்களாக மதரஸாவின் சீனியர் மாணவர் ஒருவரால் சிறுவன் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆகஸ்ட் 31 ஆம் தேதியும் அவரைக் கொல்ல முயற்சி நடந்ததாக அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.