இன்றைய முக்கிய செய்திகள்

56 ஆண்டுகளுக்குப் பிறகு கயானா சென்ற முதல் இந்திய பிரதமர்

பிரதமர் நரேந்திர மோடி நைஜீரியா, பிரேசில், கயானா ஆகிய 3 நாடுகளுக்கு 6 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

நைஜீரியா அதிபர் போலா அகமது தினுபு அழைப்பின் பேரில் பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டுக்கு அரசுமுறை பயணமாக சென்றார். 17 ஆண்டுகளுக்குப் பிறகு நைஜீரியா சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமை அவருக்கு கிடைத்தது.

நைஜீரியா பயணத்தை முடித்துக் கொண்டு பிரேசில் சென்ற மோடி ரியோ டி ஜெனிரோ நகரில் தொடங்கிய ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்றார். இந்த மாநாட்டுக்கு பிரேசில் அதிபர் லுயிஸ் இனாசியோ லுலா டா சில்வா தலைமை தாங்கினார்.

இந்த மாநாட்டில், நீடித்த வளர்ச்சி, பொருளாதார ஸ்திரத் தன்மை உள்ளிட்ட சர்வதேச விவகாரங்களில் இந்தியாவின் நிலைப்பாட்டை பிரதமர் மோடி எடுத்துரைத்தார். இதனை தொடர்ந்து அந்நாட்டு அதிபர் போலா அகமது தினுபுவை சந்தித்து இருதரப்பு உறவை பலப்படுத்துவது குறித்து பேசினார்.

இதனை தொடர்ந்து இன்று மேற்கு இந்திய தீவுகளில் ஒன்றான கயானாவுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டார்.

அங்கு சென்ற பிரதமர் மோடிக்கு சம்பிரதாய முறைப்படி வரவேற்பும் மரியாதையும் அளிக்கப்பட்டது.

(Visited 29 times, 1 visits today)

KP

About Author

You may also like

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

இலங்கைக்கு இந்தியா வழங்கிய மகிழ்ச்சியான செய்தி – 61.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி

  • October 5, 2024
இலங்கைக்கு 61.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை இந்தியா வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் மேற்கொள்ளப்படவுள்ள முதலீடுகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுடன், இந்திய
இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

2 வாரங்களை சிறப்பாக பயன்படுத்திய அனுரகுமார – எரிக்சொல்ஹெய்ம் பாராட்டு

  • October 5, 2024
இலங்கைக்கு சர்வதேச சமூகம் ஆதரவளிக்கவேண்டும் என இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அனுரகுமார தெரிவு செய்யப்பட்டு இரண்டு வாரங்களாகின்றன