டெல்லியில் தரையிறங்கிய ஈரானில் இருந்து வந்த முதல் இந்தியர்களின் விமானம்
ஈரானில்(Iran) ஏற்பட்டுள்ள மோசமான சூழ்நிலைக்கு மத்தியில், இந்தியர்களை ஏற்றி வந்த முதல் இரண்டு வணிக விமானங்கள் டெல்லியில்(Delhi) தரையிறங்கியுள்ளது.
இந்தியாவுக்குத் திரும்பிய இந்தியர்கள் நெருக்கடியின் போது அரசாங்கத்தின் உதவிக்கு தங்கள் நன்றியை தெரிவித்தனர்.
ஈரானில் இருந்து திரும்பிய ஒரு மருத்துவ மாணவி, போராட்டங்களைப் பற்றி கேள்விப்பட்டதாகவும், ஆனால் எந்தப் போராட்டத்தையும் தான் பார்த்ததில்லை என்றும், இணையம் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு இந்தியர், கடந்த இரண்டு வாரங்களாக மட்டுமே பிரச்சினைகளை எதிர்கொண்டோம். “நாங்கள் வெளியே சென்றபோது, போராட்டக்காரர்கள் வழிமறித்து பிரச்சனையை ஏற்படுத்துவார்கள். இணையம் இல்லாததால் எங்கள் குடும்பத்தினருக்குத் தெரிவிக்க முடியவில்லை, நாங்கள் கொஞ்சம் கவலைப்பட்டோம். தூதரகத்தை கூட தொடர்பு கொள்ள முடியவில்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்த இரண்டு விமானங்களில் எத்தனை இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர் மற்றும் ஈரானில் இன்னும் எதனை இந்தியர்கள் உள்ளனர் என்பதை அரசாங்கம் வெளியிடவில்லை.





